21-ஆம் நூற்றாண்டில் மின்சாரம் இல்லாத ஒலிம்பிக் வீராங்கனையின் கிராமம்!

வியாழன், 1 செப்டம்பர் 2016 (19:28 IST)
ரியோ ஒலிம்பிக்கில் கென்யாவை சேர்ந்த பெயித் கிப்யிகான் என்ற வீராங்கனை 1500 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் பங்கேற்று தங்க பதக்கம் வென்றவர்.


 


இவர், கென்யாவில் மிகவும் பின் தங்கிய கிராமத்தை சேர்ந்தவர், இவரது கிராமத்தில் மின்சார வசதி கூட கிடையாது. பெயித் தங்கம் வாங்கியதை கூட அவரது பெற்றோரால் பார்க்கவும் முடியவில்லை. அடுத்த நாள் செய்திதாளில் படித்துத்தான் தன் மகள் தங்க பதக்கம் வென்றதை அவர்களால் தெரிந்து கொள்ள முடிந்தது.

இது குறித்து, பெயித் கிப்யிகானின் தந்தை சாமுவேல், கென்ய அதிபருக்கு உருக்கமான வேண்டுகோள் வைத்து, தங்கள் கிராமத்திற்கு மின்சார வசதி ஏற்படுத்தி கொடுக்க கோரினார். இதை அடுத்து, அக்கிராமத்திற்கு மின்சார வசதி கொடுக்கப்பட்டது. 20-ஆம் நூற்றாண்டில் மின்சாரம் வசதி பெற தங்க பதக்கம் வெல்ல வேண்டி இருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்