எனக்கு நிறைய கொலை மிரட்டல் வருகிறது.. வருத்தத்துடன் கூறும் எலான் மஸ்க்..!

Mahendran

வியாழன், 27 பிப்ரவரி 2025 (18:46 IST)
அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், பிரபல தொழிலதிபர் எலான் மஸ்கை முக்கிய பணியில் இணைத்துள்ள நிலையில், தற்போது எலான் மஸ்கின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், தனக்கு நிறைய கொலை மிரட்டல்கள் வருவதாக அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு துறைக்கு அமெரிக்கா அதிகம் செலவு செய்கிறது என்றும், வட்டி மட்டும் ஒரு டிரில்லியன் டாலருக்கு அதிகமான செலவிடுகிறோம் என்றும் எலான் மஸ்க் குறிப்பிட்டார்.
 
 இதே நிலை தொடர்ந்தால், அமெரிக்கா உண்மையில் திவால் ஆகிவிடும் என்பதால் தான் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
 
ஆனால், அதே நேரத்தில், ஆட்குறைப்பு நடவடிக்கையால் நிறைய விமர்சனங்களை எதிர்கொள்கிறேன் என்றும், நிறைய கொலை மிரட்டல்களையும் பெறுகிறேன் என்றும் அவர் கூறினார். 
 
எனக்கு எவ்வளவு மிரட்டல்கள் வந்தாலும், அமெரிக்காவை முன்னேற்றுவதற்காக என் மனசாட்சிக்கு உட்பட்டு அதிரடி நடவடிக்கை எடுப்பேன். அவ்வாறு நடவடிக்கை எடுத்தால்மட்டுமே அமெரிக்காவை காப்பாற்ற முடியும்," என எலான் மஸ்க் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்