வீட்டின் மீது மோதி வெடித்த ராணுவ விமானம்! உடல் கருகி பலியான பொதுமக்கள்! - சூடானில் அதிர்ச்சி!

Prasanth Karthick

புதன், 26 பிப்ரவரி 2025 (15:37 IST)

சூடான் நாட்டில் மக்கள் வசிக்கும் பகுதியில் ராணுவ விமானம் விழுந்து வெடித்ததில் அப்பகுதியை சேர்ந்த பலர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சூடான் நாட்டின் வாடி சாயிட்னா விமானப்படை தளத்தில் இருந்து ஆண்டோனோவ் ஏர்கிராப்ட் ராணுவ விமானம் ஒன்று டேக் ஆஃப் செய்து வானத்தில் பறந்து சென்றுள்ளது. அப்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் பூமியில் விழுந்தது.

 

ஓம்துர்மான் என்ற பகுதியில் மக்கள் பலர் வசிக்கும் இடத்தில் ஒரு வீட்டின் மீது மோதிய விமானம் பலமாக வெடித்து சிதறியது. இதில் அந்த வீட்டில் இருந்தோர் மட்டுமல்லாது அந்த வீட்டை சுற்றிலும் உள்ள வீடுகளில் இருந்தவர்கள், சாலையில் சென்றவர்கள் என பலரும் தீப்பற்றி பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

 

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த விமானிகள், ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என சுமார் 46 பேர் உயிரிழந்ததாக சூடான் அரசு அறிவித்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்