அமெரிக்காவில் சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் பீனிக்ஸ் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த விமானம் 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கையில், ஒரு பெண் பயணி விமானத்தின் கேபின் அருகே சென்று, "நான் உடனே இறங்க வேண்டும்" என்று கூறினார்.
விமான ஊழியர்கள், "விமானம் 30,000 அடி உயரத்தில் பறக்கும் போது எப்படி இறங்க முடியும்?" என்று மறுப்பு தெரிவித்தனர். உடனே, அந்த பெண் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், தனது உடலில் அணிந்திருந்த அனைத்து ஆடைகளையும் கழட்டிவிட்டு நிர்வாண நிலையில் சத்தமாக இங்கும் அங்கும் ஓடி விடத் தொடங்கினார்.
ஒரு கட்டத்தில், விமானியின் அறைக்கதவை உடைக்க அவர் முயற்சித்தார். அந்த நேரத்தில், விமான ஊழியர்கள் ஒரு துணியால் அவரை மூட முயன்றனர். ஆனால், அவர் நிர்வாணமாகவே ஓடிக்கொண்டே, "நான் தரையிறங்க வேண்டும்" என்று நிர்பந்தம் செய்தார்.
இதனை அடுத்து, விமானம் தரையிறங்கியவுடன் அந்த பெண்ணை காவலில் எடுத்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், அவர் மனநிலை சரியில்லாதவர் என தெரியவந்துள்ளது.