ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய முன்னாள் பிரதமருக்கு சம்மன்

ஞாயிறு, 20 மே 2018 (12:47 IST)
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கை விசாரிக்க அவரை நேரில் ஆஜராக வேண்டும் எனக் கூறி ஊழல் தடுப்பு அமைப்பு அவருக்கு சம்மன் அனுப்பி உள்ளது.
மலேசியாவில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் தோல்வியுற்றார். தற்போதைய பிரதமாராக மகாதீர் முகமது பதவி வகித்து வருகிறார். ஏற்கனவே நஜீப் ரசாக் மீது ஏராளமான ஊழல் புகார்கள் இருந்து வந்தது. 
 
இந்நிலையில் ஊழல் வழக்கை விசாரித்து வந்த அதிகாரிகள்  திடீரென நஜீப் ரசாக் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 72 பைகளில் பதுக்கி வைத்திருந்த 100 கிலோ தங்கம், ரூ.171 கோடி ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் மலேசிய அரசியல் வட்டாரங்களில் சலசப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து ஊழல் தடுப்பு அமைப்பு வரும் செவ்வாய்க்கிழமை  விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நஜீப் ரசாக்கிற்கு சம்மன் அனுப்பி உள்ளது. விசாரணைக்குப் பின் அவர் கைது செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்