முன்னாள் பிரதமர் வீட்டில் 100 கிலோ தங்கம், 171 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல்

சனி, 19 மே 2018 (11:46 IST)
மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக், வீட்டில் நடத்திய அதிரடி சோதனையில் 100 கிலோ தங்கம் மற்றும் ரூ.171 கோடி பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
மலேசியாவில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் தோல்வியுற்றார். தற்போதைய பிரதமாராக மகாதீர் முகமது பதவி வகித்து வருகிறார்.ஏற்கனவே நஜீப் ரசாக் மீது ஏராளமான ஊழல் புகார்கள் இருந்து வந்தது. 
இந்நிலையில் ஊழல் வழக்கை விசாரித்து வந்த அதிகாரிகள் நேற்று திடீரென நஜீப் ரசாக் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 72 பைகளில் பதுக்கி வைத்திருந்த 100 கிலோ தங்கம், ரூ.171 கோடி ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் மலேசிய அரசியல் வட்டாரங்களில் சலசப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்