இலங்கையின் புதிய பிரதமரானார் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே

வெள்ளி, 26 அக்டோபர் 2018 (20:39 IST)
2009ம் ஆண்டு இலங்கைக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே நடைபெற்ற போரில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கான போர்குற்ற விசாரணை ஐநாசபையால் தீர்மானிக்கப்பட்ட அதிகாரிகளால்  நடைபெற்றது . இதில் ராஜபக்சே மீது இனப்படுகொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.ஆனால் உறுதி செய்யப்படவில்லை. இதனையடுத்து அடுத்து நடந்த தேர்தலில் ராஜபக்சே பெரும் தோல்வியடைந்தார்.
 
இந்நிலையில் முன்னாள் அதிபர் ராஜபக்சே ஆட்சியின் போது நடைபெற்ற போர் சம்பந்தமாக பலமுனைகளிலிருந்து நெருக்கடிகள் வழுத்த போது  அவருக்கு எதிராக விசாரணைகளும் தொடங்கப்பட்டது.
 
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மஹிந்த ராஜபக்சே இந்தியாவிற்கு வருகை புரிந்து பாரத பிரதமர் மோடியை சந்தித்து சென்றார். 
 
இதனையடுத்து அதிபர் சிரிசேனாவின் கட்சியும் இலங்கை அரசில் இருந்து விலகி இருப்பதாகத்தகவல் வெளிவந்த நிலையில் உள்நாட்டு அரசியல் காரணமாக இலங்கையின் அதிபர் ரணில் விகிரமசிங்கே பதவி நீக்கம்செய்யப்பட்டு  முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே தற்போது புதிய அதிபராக பதவி ஏற்றிருக்கிறார்.
 
ஆளும் கட்சியின் கூட்டணியில் ஏற்பட்ட பிளவு காரணமாக தற்போது இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
எனவே இலங்கை அதிபர் மைத்ரிபால சிரிசேனா முன்னிலையில் ராஜபக்சேபிரதமராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
 
இனி அடுத்து வரும் காலங்களில் இலங்கையில் போர்குற்றம் சம்பந்தமான விசாரணைகள் முறையாக நடைபெறுமா என்ற ஐயம் இப்போதே புயலாக வீசத்தொடங்கிவிட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்