15 ஆண்டுகள் சிறை; 80 கோடி அபராதம் –குற்றவாளி என அறிவிக்கப்பட்டார் தென்கொரிய முன்னாள் அதிபர் லீ மியூங்

சனி, 6 அக்டோபர் 2018 (17:55 IST)
தென்கொரிய முன்னாள் அதிபர் லீ மியுங் பாக் மீது தான் பதவியில் இருந்த காலத்தில் சாம்சங் நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெற்றுக்கொண்டு அதன் நிறுவனருக்கு ஒரு வழக்கில் இருந்து விடுதலையடைய உதவி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.

லீ மீதான இந்த  ஊழல் வழக்கை சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம் விசாரித்து வந்தது. லீ தரப்பு இது அரசியல் காரணங்களுக்காக கூறப்படும் குற்றச்சாட்டு என தெரிவித்தது. சாம்சங் நிறுவனமும் தாங்கள் லீக்கு லஞ்சம் கொடுக்கவில்லை என அறிவித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நிலையில் நீதிமன்றம் லீ மியூங்கை குற்றவாளி என அறிவித்தது.

அவருக்கு 15 ஆண்டுகாலம் சிறையும் இந்திய மதிப்ப்பில் 80 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தீர்ப்பின் போது லீ மியூங் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. குற்றம் சரிவர நிரூபிக்கப் பட்டுள்ளதால் கடுமையான தண்டனை தவிர்க்கப்பட முடியாததாகி விட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தற்போது லீ முயீங்கிற்கு 76 வயது ஆகிறது. அவர் 2008 முதல் 2013 வரை தென் கொரியாவின் அதிபராக பதவியில் இருந்தார். அதிபராவதற்கு முன்பு ஹுண்டாய் பொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் சியோல் நகரத்தின் மேயராகவும் பதவி வகித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்