காலாண்டு தேர்வு விடுமுறைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலாண்டு தேர்வு விடுமுறை தொடங்க இருக்கும் நிலையில், பல தனியார் பள்ளிகள் விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், நீதிமன்ற உத்தரவுப்படி விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி, இந்த எச்சரிக்கை சுற்றறிக்கையை பள்ளிக் கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது.
காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விடுமுறை நாளில் சிறப்பு வகுப்புகளை நடத்த நீதிமன்றம் தடை விதித்ததை சுட்டிக்காட்டியும் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் தனியார் பள்ளி நிர்வாகங்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது