உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் அளித்த பேட்டியில், "நான் சனிக்கிழமை மட்டும் வெளியே வருபவன் அல்ல. ஞாயிற்றுக்கிழமைகளிலும் தொடர்ந்து பயணம் செய்வேன். இன்று என்ன கிழமை என்று கூட எனக்குத் தெரியாது" என்று கூறினார்.
மேலும் ஒரு அரசியல்வாதி வார இறுதி நாட்களில் மட்டுமல்ல, ஒரு நாளின் 24 மணி நேரமும், வாரத்தின் ஏழு நாட்களும் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும்.
ஆனால் இதற்கு பதிலளித்த தமிழக வெற்றிக் கழகத்தின் உயர் மட்ட வட்டாரங்கள், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பிரச்சார பயணங்கள் மேற்கொள்ளப்படுவது குறித்து, "பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது. மதிய வேளையில் மாணவர்கள் பள்ளியிலிருந்து வெளியே வரும்போது, அவர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக் கூடாது" என்று விளக்கமளித்துள்ளனர்.