துபாயில் இருந்து தனியார் விமானத்தை வாடகைக்கு எடுத்த விமானம் ஒன்று நிகரகுவா சென்று, அங்கிருந்து அமெரிக்கா, கனடா செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது
ஆனால் திடீரென vஇமானம் பிரான்ஸ் எல்லைப்பகுதியில பறந்தபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும், விமானம் தரையிறக்க அந்நாட்டிடம் அனுமதி கோரப்பட்டதாகவும், இதையடுத்து, விமானம் இறங்க அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
பெரும்பாலானோர் இந்தி பேசுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 303 பேரில் 2 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை வருகிறது. முதற்கட்ட விசாரணையில் விமானத்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் இந்தியர்கள் என தெரிய வந்துள்ளது. அதிலும் குஜராத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் உள்ளனர். ஒரே நேரத்தில் 303 பேர் ஒரே விமானத்தில் வந்ததன் நோக்கம் என்ன? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது!