குற்றாலத்தில் ஒரே ஒரு அருவியில் மட்டும் குளிக்க அனுமதி.. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

புதன், 20 டிசம்பர் 2023 (07:45 IST)
கடந்த சில நாட்களாக தென் மாவட்டத்தில் கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும் நிலையில் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதன் காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க மட்டுமின்றி அருகில் செல்ல கூட அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஐயப்பன் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்தனர்

இந்த நிலையில் குற்றாலம் ஐந்தருவியில் மட்டும் பொதுமக்கள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மழை குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து அளவு குறைந்து இருக்கிறது என்றும், விரைவில் மற்ற அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஐந்தருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்