துருக்கியைச் சேர்ந்த விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானப் பணிப்பெண் ஒருவர், விமானத்தில் சாப்பிட்ட உணவில் பாம்பின் தலை துண்டிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக டிவிட்டரில் பகிரப்பட்ட வீடியோவில், பாம்பின் துண்டிக்கப்பட்ட தலை உணவு தட்டில் நடுவில் கிடப்பதைக் காட்டுகிறது.
இது குறித்து உடனடியாக சன் எக்ஸ்பிரஸ் விமான நிறுவத்தின் பிரதிநிதி கூறியதாவது, இந்த சம்பவம் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. உணவு வழங்கிய நிறுவனத்தின் ஒப்பந்தத்தை விமான நிறுவனம் இடை நிறுத்தியுள்ளது மற்றும் விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.
விமானத் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் இருக்கும் எங்கள் விமானத்தில் எங்கள் விருந்தினர்களுக்கு நாங்கள் வழங்கும் சேவைகள் மிக உயர்ந்த தரம் வாய்ந்தவை மற்றும் எங்கள் விருந்தினர்கள் மற்றும் பணியாளர்கள் இருவரும் வசதியான மற்றும் பாதுகாப்பான விமான அனுபவத்தைப் பெறுவதே எங்கள் முன்னுரிமை எனவும் குறிப்பிட்டார்.