மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய குரங்கு அம்மை நோயாளி: அதிர்ச்சி தகவல்

திங்கள், 25 ஜூலை 2022 (16:54 IST)
குரங்கு அம்மை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் திடீரென மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தாய்லாந்து நாட்டில் நடை பெற்றுள்ளது.
 
தாய்லாந்து நாட்டில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் திடீரென அவர் சிகிச்சைக்கு பயந்து தாய்லாந்தில் இருந்து தப்பி கம்போடியாவுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது 
 
இதனை அடுத்து அவரை தேடும் பணியில் கம்போடிய சுகாதார அமைச்சகம் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவர் தனது மொபைல் போனை சுவிட்ச் ஆப் பண்ணி விட்டதாகவும் அவரை தொடர்புகொள்ள முயற்சித்தும் பயனில்லை என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
இந்த நிலையில் கம்போடியா காவல்துறை பல இடங்களில் அவரை தேடுதல் வேட்டை நடத்தியதாகவும் ஒரு விருந்தினர் மாளிகையில் அவர் இருப்பதை அறிந்ததும் அவர் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது அவர் மருத்துவமனைக்கு மீண்டும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்