இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில் உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், காபூல் விமான நிலையத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கவுரவம் அளிக்கும் வகையில், வருகிற 30-ம் தேதி மாலை வரை அமெரிக்க கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.