ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு சம்பவம்! – உலக நாடுகள் கடும் கண்டனம்!

வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (08:58 IST)
ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலர் பலியான நிலையில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் மக்கள் வேகவேகமாக வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே நடந்த வெடிக்குண்டு தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் உட்பட 78 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில் உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. உலக நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஓரணியாக சேர வேண்டும் என இந்தியா தெரிவித்துள்ளது. அதேபோல ஆப்கானியர்களுக்கு உதவ உலகநாடுகள் முன்வர வேண்டும் என ஐ.நா தெரிவித்துள்ளது.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், எஞ்சியிருக்கும் நாட்களுக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற நினைப்பவர்களுக்கு உதவ, பிரிட்டன் படையினர் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்