கணவரை விவாகரத்து செய்வதாக பெண் பிரதமர் அறிவிப்பு: எந்த நாட்டில் தெரியுமா?
வியாழன், 11 மே 2023 (15:33 IST)
பின்லாந்து நாட்டின் பிரதமர் தனது கணவரை விவாகரத்து செய்யப்போவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பின்லாந்து நாட்டின் பிரதமராக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறார் சன்னா மரின். 37 வயதான இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்க்கஸ் என்பவரை காதலித்த நிலையில் இருவருக்கும் பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்தவுடன் 2020 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகத்து செய்ய மனுத்தாக்கல் செய்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் பின்லாந்து பிரதமர் சன்ன மரின் தெரிவித்துள்ளார்.
விவாகரத்து பெற்றாலும் சிறந்த நண்பர்களாக இருப்போம் என்றும் தங்கள் குழந்தைக்கு ஒரு நல்ல பெற்றோராக இருப்போம் என்றும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.