இந்த நிலையில் முன்னாள் பாஜக எம்பி சுப்பிரமணியன் சாமி இது குறித்து கூறிய போது ஜெயலலிதா ஒரு சக்தி வாய்ந்த அரசியல்வாதி பெண்ணாக இருந்தார். அதனை அடுத்து தற்போது மம்தா பானர்ஜி தான் துணிச்சலாகவும் தீர்க்கமான முடிவை எடுக்கக்கூடியவராகவும் இருக்கிறார். அவரை அமலாக்கத்துறை உள்ளிட்ட எதை வைத்தும் அச்சப்படுத்த முடியாது.
எனவே எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக மம்தா பானர்ஜி தான் தேர்வு செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் பாஜக எம்பியும், தற்போது பாஜகவில் இருப்பவருமான சுப்பிரமணியம் சாமி எதிர்க்கட்சி அணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.