பேய் பிடித்திருப்பதாக நினைத்து நான்கு மாத குழந்தையை காரிலிருந்து தூக்கி எறிந்த தந்தை

Webdunia
வியாழன், 9 ஜூன் 2016 (12:19 IST)
தன்னுடைய குழந்தைக்கு பேய் பிடித்துவிட்டது என நினைத்து, அக்குழந்தையை காரிலிருந்து வீசி எறிந்து கொலை செய்த ஒரு கொடிய தந்தைக்கு 15 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.


 
 
சவுதி அரேபியாவில் மனாமா  நகரில் ஒரு நபர்  தனது மனைவி மற்றும் 4 மாதக் குழந்தையுடன் காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, திடீரென அந்த நபர் காரின் ஜன்னல் வழியாக அந்த குழந்தையை வீசி எறிந்துள்ளார்.
 
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த, அக்குழந்தையின் தாய், காரிலிருந்து இறங்கி குழந்தையை காப்பாற்ற ஓடினார்.  அப்போது பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது  இதில் தயார் அதே இடத்தில் உயிரிழந்துள்ளார். வீசி எறியப்பட்ட குழந்தையும் பலத்த காயங்களோடு பரிதாபமாக உயிரிழந்தது.
 
இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த நபரை விரட்டிச் சென்று மடக்கினர். விசாரணையில் தனது குழந்தைக்கு பேய் பிடித்துவிட்டது எனக்கூறி, தந்தை பயங்கரமாக குழந்தையை அடித்துள்ளார். அதன் முடிவில்தான் குழந்தையை காரின் ஜன்னல் வழியாக தூக்கி வீசியுள்ளார், மேலும் மனைவியும் காரில் இருந்து இறங்கிவிட்டாலும், அதையும் கண்டுகொள்ளாமல் அங்கிருந்து சென்று விட்டார் என்பது தெரிய வந்தது. 
 
இதுதொடர்பான வழக்கு மெக்காவில் நடைபெற்று வந்த நிலையில், இவருக்கு 15 ஆண்டுகள் சிறைதண்டனையும், 1,500 கசையடிகளும் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்