சூடானில் தீவிரமாகும் உள்நாட்டு போர்: ராணுவ தாக்குதலில் 127 பேர் உயிரிழப்பு

Mahendran
வியாழன், 12 டிசம்பர் 2024 (13:10 IST)
சூடான் நாட்டில் உள்நாட்டு போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில், ராணுவ படை வீரர்களின் தாக்குதல் காரணமாக 127 பேர் உயிரிழந்ததாக வெளிவந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு, ராணுவ படையினர் திடீரென புரட்சியில் ஈடுபட்டதை தொடர்ந்து, அந்நாட்டின் பிரதமர் அப்துல்லா சிறைபிடிக்கப்பட்டு வீட்டு காவலில் வைக்கப்பட்டார்.  இந்த நிலையில் ராணுவ தளபதிக்கும், துணை தளபதிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டதால் தற்போது இருதரப்பும் மோதி வருகின்றனர். இதனால் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ளன.

இந்த போரில் பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் பலியான நிலையில், இந்த போரை நிறுத்த இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், தற்போது உள்நாட்டு போர் மேலும் தீவிரமாகியதாகவும், துணை ராணுவ படை வீரர்களின் முகாம்கள் மீது குண்டு வீசப்பட்டதில் 127 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டு வருகிறது. இதனால், சூடான் நாட்டில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்