டுவிட்டரை வாங்க எலான் மஸ்க் சம்மதம்: ஒரே நாளில் 20% பங்கின் விலை அதிகரிப்பு!

புதன், 5 அக்டோபர் 2022 (08:26 IST)
டுவிட்டரை வாங்க எலான் மஸ்க் சம்மதம் தெரிவித்துள்ளதால் ஒரே நாளில்  டுவிட்டர் பங்குகள் 20 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
டுவிட்டர் நிறுவனத்தை வாங்க கடந்த சில மாதங்களுக்கு முன் எலான் மஸ்க் முடிவு செய்தார் என்பதும் அதன் பின் டுவிட்டரில் போலி கணக்குகள் அதிகமாக இருப்பதால் அதை வாங்குவதில் இருந்து பின்வாங்கினார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் எலான் மஸ்க்கிற்கு எதிராக டுவிட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது
 
இந்த நிலையில் ஏற்கனவே செய்த ஒப்பந்தத்தின்படி டுவிட்டர் நிறுவனத்தை வாங்கி கொள்வதாக எலான் மஸ்க் தற்போது அதிரடியாக அறிவித்துள்ளார். எலான் மஸ்க்கின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகள் 20 சதவீதம் உயர்ந்து தற்போது 52 டாலராக விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்