ராமரை ஏற்காத திமுகவுடன் கூட்டணி ஏன்? காங்கிரஸ், ஆர்ஜேடி கட்சிகளுக்கு அனுராக் தாக்குர் கேள்வி

Mahendran

வெள்ளி, 12 செப்டம்பர் 2025 (12:31 IST)
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ராமரை ஏற்காதவர் என்றும், ராமர் கோவில் கட்டப்படுவதை எதிர்த்தவர் என்றும் கூறி, அவருடன் ஏன் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி வைத்துள்ளனர் என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் கேள்வி எழுப்பினார்.
 
தமிழக அமைச்சர் துரைமுருகன், “தமிழ்நாடு பிகார் அல்ல. தமிழகத்தில் மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளனர். பிகாரில் உள்ளதை போன்ற ஆட்சி இங்கு இல்லை. அவர்களின் தந்திரங்கள் தமிழகத்தில் எடுபடாது” என்று கூறியதற்கு பதிலளிக்கும் விதமாக அனுராக் தாக்குர் இந்தக் கருத்தை தெரிவித்தார்.
 
பாட்னா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அனுராக் தாக்குர், “ராமர் கோவில் கட்டுமானத்தை எதிர்த்த ஸ்டாலினுடன் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி ஏன் கூட்டணி அமைத்துள்ளன என்பதை பிகார் மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். 
ஸ்டாலினின் மகன் சனாதன தர்மத்தை இழிவுபடுத்திப் பேசினார். இதையெல்லாம் கருத்தில் கொண்டு, இந்த கூட்டணி ஏன் ஏற்பட்டது என்ற கேள்வி எழுகிறது” என்று கூறினார்
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்