தமிழகம் தண்ணீரில் தத்தளிப்பு: ஆஸ்திரேலியா செல்கிறார் அமைச்சர் வேலுமணி

சனி, 4 நவம்பர் 2017 (10:36 IST)
தமிழகம் தண்ணீரில் கடந்த ஒரு வாரமாக தத்தளித்து கொண்டிருக்கும் நிலையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி ஆறுநாள் பயணமாக நாளை ஆஸ்திரேலியா செல்லவுள்ளார். மழைநீர் வடிகாலுக்கு தீர்வு காண, வளர்ந்த நாடுகளில் பின்பற்றும் முறைகளை அங்கு அவர் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளார்.



 
 
மேலும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு பெருமளவில் முதலீடுகளை ஈர்க்கவும் முயற்சி என தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
இந்த நிலையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆஸ்திரேலியா பயணம் தமிழகத்திற்கு பயனாக அமையும் என அன்வர்ராஜா எம்.பி அவர்களும்,  அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ஆஸ்திரேலியா பயணம் தேவையற்றது  என திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் அவர்களும், பருவ மழை பாதிப்பு இருக்கும் நேரத்தில், அமைச்சர்  வேலுமணி ஆஸ்திரேலியா செல்ல இருப்பது சரியில்லை என் ஆர்.எஸ்.பாரதி அவர்களும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய பயணத்திற்கு அதிக எதிர்ப்பு ஏற்பட்டதால் தனது பயணத்தை அமைச்சர் ரத்து செய்துவிட்டதாக சற்றுமுன்னர் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்