இந்தோனேஷியாவில் நில நடுக்கம்....பலி எண்ணிக்கை 268 ஆக உயர்வு

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2022 (23:41 IST)
தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் அடிக்கடி  நில நடுக்கம் ஏற்படுவது வழக்கம்.

இந்த நிலையில் இங்குள்ள மேற்கு ஜாவா என்ற மாகாணத்தில் நேற்று  திடீரென்று நில நடுக்கம் ஏற்பட்டது.

இதில், 5.6 ரிக்டர் அளவுகோலாகப் பதிவாகியுள்ளது. இந்த  நில நடுக்கம் வந்தபோது, மக்கள் சாலைகள் மற்றும் தெருக்களில் வந்து நின்று கொண்டனர்.

இந்த நில நடுக்கத்தால், இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பபட்ட நிலையில், பலியானோர் எண்ணிக்கை 268 ஆக உயர்ந்துள்ளது. இதில், பள்ளிக் குழந்தைகள் என்ற தகவல் வெளியாகிறது.

இன்னும் 151 பேரைக் காணவில்லை என்றும், ஆயிரத்திற்கும் அதிகமானோர் இதில் படுகாயம் அடைந்துள்ளதாகவும் , 13 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.

இந்த நில  நடுக்கத்தால் சுமார் 2200 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. எனவே அரசு 5000க்கும் அதிகமான மக்களை பதுகாப்பான இடத்திற்கு அழைத்து ச் சென்ரு தங்க வைத்துள்ளனர்.
.
Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்