இந்தோனேசியாவில் தீடீர் நிலநடுக்கம்! – கட்டிடங்கள் குலுங்கியதால் அதிர்ச்சி!

செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (08:39 IST)
தீவு நாடான இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பல்வேறு தீவுகளை கொண்ட தீவு நாடான இந்தோனேசியா அதிகமான எரிமலைகளை கொண்ட நாடாகவும் உள்ளது. இதனால் அவ்வபோது நிலநடுக்கங்கள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் இந்தோனேசியாவின் ஸ்லவைசி தீவின் கொடம்பகு பகுதியில் இருந்து வடகிழக்கே 779 கிலோ மீட்டர் தொலைவில் கடல் பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 6.53 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்