நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ...மக்கள் அதிர்ச்சி

ஞாயிறு, 16 ஜூன் 2019 (17:20 IST)
நியூசிலாந்து நாட்டில் இன்று காலையில்  7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதற்கு முன்னர் சுனாமி எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் அந்நாட்டு அரசு  அறிவிப்பை  வாபஸ் பெற்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நியூஸிலாந்து நாட்டில் இன்று காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது.
 
இந்த நிலநடுக்கமானது ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத கெர்மெடிக் தீவு என்ற இடத்தில் இருந்து வடக்கே ஏற்பட்டுள்ளது.
 
மேலும் இந்த நிலநடுக்கத்தால் பெருமளவில் பாதிப்பு ஏற்படுத்தும் அளவில் சுனாமி அலைகள் வரும் என முன்கூட்டியே எச்சரிக்கை விடப்பட்டது.பின்னர் நியூஸிலாந்துஅரசு இந்த எச்சரிக்கையை வாபஸ் பெற்றது.  அத்துடன் பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறு அந்நாட்டு அரசு அறுவுறுத்திவருகின்றது. இதுவரை நியூஸிலாந்தில் நிலநடுக்கத்தால் எந்த சேதம் ஏற்பட்டது என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்