தென்மேற்கு துருக்கியில் நள்ளிரவில் பூகம்பம்: அலறியடித்து ஓடிய பொதுமக்கள்

சனி, 25 நவம்பர் 2017 (07:35 IST)
கடந்த 2011ஆம் ஆண்டு நிகழ்ந்த பூகம்பத்தை துருக்கி மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். ரிக்டர் அளவில் 7.2 அளவில் ஏற்பட்ட இந்த பூகம்பத்தால் சுமார் 600 பேர் பலியாகினர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் துருக்கியில் மீண்டும் பூகம்பம் ஏற்பட்டதால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து அலறியடித்து வெளியேறினர்

தென்கிழக்கு பகுதியில் உள்ள ஏஜியன் கடலில் சுமார் 6.3 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக இருந்ததாக புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நள்ளிரவில் திடீரென கட்டிடங்கள் குலுங்கியதால் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து தூக்க கலக்கத்துடன் வீட்டை விட்டு வெளியே குழந்தைகளுடன் ஓடி வந்தனர்

இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் இதுவரை யாரும் காயம் அடையவில்லை என்றும் பொருட்சேதங்கள் குறித்து இனிமேல் தான் கணக்கிட வேண்டும் என்று துருக்கி அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்