சிறுமியை விரட்டி தூக்கி செல்ல முயலும் ராட்சத கழுகு - அதிர்ச்சி வீடியோ

Webdunia
புதன், 18 ஜூலை 2018 (12:04 IST)
கிர்கிஸ்தான் நாடில் கழுகு வேட்டையின் போது 8 வயது சிறுமியை,ராட்சத கழுகு ஒன்று விரட்டி சென்று தூக்கி செல்ல முயலும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

 
கிர்கிஸ்தான் நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் கழுகு வேட்டையாடும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. வீரர்கள் கழுகுகளை வேட்டையாட பொதுமக்கள் அதை கண்டு களித்தனர். அப்போது, அங்கு நின்றிருந்த 8 வயது சிறுமியை ஒரு கழுகு விரட்டி சென்று தூக்கி செல்ல முயன்றது.
 
இதைக்கண்டு அங்கிருந்து அதிர்ச்சியில் கூச்சலிட்டனர். அந்த சிறுமியும் கூச்சலிட்டாள். அங்கிருந்த வீரர்கள் உடனடியாக ஓடி சென்று கழுகிடமிருந்து சிறுமியை மீட்டனர். அவளுக்கு தலையில் காயம் ஏற்பட்டதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்