கடற்கரைகளில் ஆபத்தில் சிக்கியவர்களை மீட்க துபாயில் நவீன ரோபோக்கள்

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2016 (16:16 IST)
முதன்முறையாக கடற்கரை பகுதியில் ஆபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளுக்காக புதிய நவீன ரோபோக்களை துபாய் அறிமுகம் செய்து உள்ளது.


 

 
 
11 கிலோ, 125 செ.மீ உயரம் உள்ள இந்த ரோபோக்கள் ரிமோட் மூலம் இயக்கப்படும். இது மனிதனை விட 12 மடங்கு அதி வேகமாக நீந்திச் செல்லும் திறன் உடையது. இவை மணிக்கு 35 கிலோ மீட்டர் வேகத்தில் செயல்படும். தொடர்ந்து 130 கிலோ மீட்டர் தொலைவு வரை பயணம் செய்யும் வகையில் சக்தி வாய்ந்த பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளது.
 
சிகப்பு நிறத்தில் ரப்பர் பொருட்களால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோக்களால் கடலில் சிக்கியவர்களை எளிதில் அடையாளம் காண முடியும். இவை கடலில் தத்தளிப்பவர்களின் அருகில் சென்றவுடன் சிறிய படகு போன்று விரியும் தன்மையுடையது . கடலில் சிக்கியவர்கள் இப்படகில் ஏறியவுடன் அவர்களை மீட்டு கரைக்கு திரும்பும்.
 
ஒரே சமயத்தில் 5 பேர் வரை இந்த ரோபோ மூலம் மீட்க முடியும், இந்த ராட்சத அலையிலும் செயல்படும் வகையிலும், ரேடியோ அலைக்கற்றைகள் மூலம் கட்டுப்படுத்தப்படுவதால் தொலை தொடர்பு பாதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்