துபாய் புர்ஜ் கலிஃபாவில் ராமர் படம் வண்ணமயமாக ஒளிர்ந்தது உண்மையா? பரபரப்பு தகவல்..!

Mahendran

செவ்வாய், 23 ஜனவரி 2024 (11:20 IST)
துபாய் புர்ஜ் கலிஃபாவில் ராமர் படம் வண்ணமயமாக ஒளிர்ந்ததாக தகவல் வெளியான நிலையில் இது உண்மையில்லை என தெரிய வந்துள்ளது.
 
புர்ஜ் கலிஃபாவில் ராமர் படம் ஒளிர்ந்ததாக எந்த ஆதாரமும் இல்லை எனவும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் படம் எடிட் செய்யப்பட்டது எனவும் கூறப்படுகிறது.
 
புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் உண்மையான படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடியபோது அந்தப் படத்தில் ராமரின் படம் இல்லை என கூறப்படுகிறது. மேலும் புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் உரிமையாளர் எமராட்ஸ் குழுமம், ராமர் படம் ஒளிர்ந்ததாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ள நிலையில் துபாய் போன்ற நாடுகளில் கூட ராமர் மதிக்கப்படுகிறார் என்பதை நிரூபிக்க இந்தச் செய்தி பரப்பப்பட்டதாகவும், இந்தச் செய்தியை பரப்பியவர்கள், புர்ஜ் கலிஃபாவில் ராமர் படம் ஒளிர்ந்ததாகக் கூறும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை மறைத்துவிட்டதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்