சமீபத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் , அதிபர் பதவிக்கு போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடனும் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட கமலா ஹாரிஸும் அமோக வெற்றி பெற்றனர். இது அதிகாரப்பூர்வாமாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாகக்கூறி நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள டொனால்ட் டிரம்ப் தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்து வருகிறார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்கிறீர்களா? என்று ஒரு செய்தியாளர் டிரம்பிடம் கேள்வி எழுப்பினார்.
இதனால் கோபமடைந்த டிரம்ப், நான் அமெரிக்க அதிபர் இப்படி என்னுடம் பேசவேண்டாம் என கூறியுள்ளார்.