டெல்லியில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தில், சட்ட அமைச்சர் ரவிசங்கர் நீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்த மசோதா தாக்கல் செய்தார். இதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. இதன்படி உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு தற்பொழுது வழங்கும் மாதச் சம்பளமான 90 ஆயிரத்திலிருந்து 2.50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகளுக்கு தற்போது வழங்கும் மாதச் சம்பளமான ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 2.80 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த சம்பள உயர்வு வரும் ஜனவரி 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. மேலும் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கான படிகள், ஓய்வூதியம் உள்ளிட்டவையும் உயர்த்தப்பட்டுள்ளது.