6,650 ஊழியர்கள் பணிநீக்கம்; டெல் எடுத்த திடீர் முடிவு! – அதிர்ச்சியில் பணியாளர்கள்!

செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (09:07 IST)
உலக அளவில் பொருளாதார மந்தநிலை பெரும் பிரச்சினையாக மாறியுள்ள நிலையில் பெருநிறுவனங்களை தொடர்ந்து டெல் நிறுவனமும் பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கொரோனா பொதுமுடக்கத்தை தொடர்ந்து ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையால் பல ஐடி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் நிறுவன பணியாளர்களை ஆயிரக்கணக்கில் பணியிலிருந்து நீக்கி வருகிறது. இதனால் ஐடி ஊழியர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

கூகிள், மைக்ரோசாப்ட், ஹெச்பி, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களை தொடர்ந்து டெல் நிறுவனமும் தங்களது பணியாளர்களில் 6,650 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இது அந்நிறுவனத்தின் 5% பணியாளர் அளவு ஆகும்.

கணினி, லேப்டாப் தயாரிப்பு நிறுவனமான டெல் சமீப காலமாக விற்பனையில் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த சில காலங்களில் தனிநபர் கணினி பயன்பாடு குறைந்துள்ளதால் விற்பனையும் குறைந்துள்ளதாகவும் அதை சரிகட்டவே பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்