இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி போர் தொடங்கியது. தொடர்ந்து இரு தரப்பினரும் தாக்குதல்களை தொடங்கினர். இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்தனர். நவம்பர் மாத இறுதியில் காசாவில் தற்காலிக போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த தற்காலிக போர் நிறுத்தமும் டிசம்பர் 1-ம் தேதி முடிவுக்கு வந்தது.
மேலும் 60,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். போரில் கொல்லப்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போரில் சுமார் 8,000 ஹமாஸ் போராளிகளை கொன்றதாக இஸ்ரேல் கூறியுள்ளது.