இந்த ஆண்டுக்கான புலிட்சர் விருதுகள்! – டேனிஷ் சித்திக் பெற்ற கௌரவம்!

செவ்வாய், 10 மே 2022 (13:20 IST)
இந்த ஆண்டிற்கான புலிட்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மறைந்த இந்திய புகைப்படக்காரர் டேனிஷ் சித்திக்கிற்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரிக்கை துறையில் சிறப்பான பங்களிப்பை அளிக்கும் நிருபர்கள், பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்காரர்கள் உள்ளிட்ட பலருக்கும் பத்திரிக்கை உலகின் உயரிய விருதான புலிட்சர் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான புலிட்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் இந்தியாவை சேர்ந்த புகைப்படக்காரர்களான அட்னன் அபிதி, காஷ்மீர் பெண் புகைப்படக்காரர் சன்னா இர்ஷாத், அமித் தேவ் உள்ளிட்டோர் பெயர் இடம்பெற்றுள்ளது

மேலும் இந்திய புகைப்படக்காரரும், ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டவருமான டேனிஷ் சித்திக் பெயரும் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

முதன்முறையாக ரொஹிங்கியா முஸ்லிம் அகதிகள் தொடர்பாக டேனிஷ் சித்திக் எடுத்த புகைப்படங்களுக்காக அவர் புலிட்சர் விருதை பெற்றார். கொரோனாவின்போது உலகம் கண்ட அசம்பாவிதங்களை புகைப்படங்களாக பதிவு செய்ததற்கான பீச்சர் புகைப்படங்கள் பிரிவில் இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்களை எரிக்கும் காட்சியை படம் பிடித்ததற்காக டேனிஷ் சித்திக் இரண்டாவது முறையாக புலிட்சர் விருதை பெறுகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்