கொரொனா எதிரொலி : சீனாவுக்கு எதிராக அணிதிரளும் நாடுகள் !!

Webdunia
புதன், 29 ஏப்ரல் 2020 (17:40 IST)
சீனாவில் இருந்து பல உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரொனா வைரஸால் முப்பது லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் சீனாவில் இருந்து மருத்துவ பொருட்க்களை வாங்கின. இதில் அதன் தரம் குறித்து  ஐரோப்பிய நாடுகள் குற்றம்சாட்டி வந்த நிலையில், இந்தியாவும் இனிமேல் சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதில்லை என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சீனாவில் இழப்பீடு கேட்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில், ஜெர்மன் நாடும் சீனாவிடம் 16,500 கோடி டாலர் இழப்பீடு கேட்டுள்ளதாக ஜெர்மனி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் கூறியதாவது :சீனாவில் இருந்து கொரொனா பரவத் தொடங்கிய முதலே அதைக் கட்டுப்படுத்த முயன்றிருந்தால் உலகம் முழுவதும் கொரொனா பரவியிருக்காது… ஜெர்மனி கேட்ட இழப்பீடு தொகையை விட அதிகம் கேட்கவுள்ளதாக அவர்  தெரிவித்துள்ளார்.

ஆனால், இதுகுறித்து சீனா எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்