சீனாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ்: அச்சத்தில் உலக நாடுகள்!

புதன், 22 ஜனவரி 2020 (09:26 IST)
சீனாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் முதன்முறையாக அமெரிக்காவிலும் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் உள்ள வுகான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அங்கு பல பேருக்கு பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸின் தொற்று பெய்ஜிங்கில் உள்ள பலருக்கும் பரவியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 9 பேர் வைரஸால் இறந்துள்ளதாக சீன செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் வுகான் சென்று வந்த அமெரிக்கர் ஒருவரிடம் கொரோனா தொற்று இருப்பது அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்தால் உலக நாடுகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன. வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள சீன நகரங்களுக்கு செல்ல வேண்டாம் என பல நாடுகள் அவர்களது மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்