பாடப் புத்தகங்களில் ஆபாச புகைப்படங்கள் இடம்பெற்றதால் சர்ச்சை...

Webdunia
திங்கள், 30 மே 2022 (17:47 IST)
சீனாவில் பள்ளி பாடப் புத்தகங்களில் ஆபாச புகைப்படங்கள் இடம்பெற்ற விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் பிரதமர் ஜின் பிங்க் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.  இங்கு 3 முதல் 6 வரையிலான சிறுவர் சிறுமியருக்ககான பள்ளிப் பாடப் புத்தகத்தில் ஆபாச படங்கள் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், இப்புகைப்படங்கள் இன ரீதியாக ஆபாசமாக சித்தரிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்க்கட்சிகளும், பெற்றோர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

குழந்தைகளுக்கு நல்ல கருத்துகள், எண்ணங்கள், விதைக்க வேண்டிய வயதில் இப்படி ஆபாச சமிக்ஞைகளை வெளிப்படுத்தும் காட்சிகளும், அமெரிக்க தேசிய கொடியை ஆடையாக அணிந்தபடி உள்ளதாகவும், முறையாக படித்துப் பார்க்காமலும், மறு ஆய்வு செய்யப்படாமல் இப்பாடப் புத்தகங்கள் வெளி வந்துள்ளதாக  விமர்சித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்