சாக்லெட்டுகள் இதய நோய்களை குணப்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா??
வியாழன், 25 மே 2017 (14:11 IST)
ஐரோப்பிய நாடுகளில் சாக்லெட் இதய நோய்களை குணப்படுத்தும் என்று கண்டரியப்பட்டுள்ளது. இதனை செயல்முறையாவும் நிருபித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதயத்தில் செயல்பாடு நிறுத்தம், பக்க வாதம், நினைவாற்றல் குறைவு மற்றும் மனநலம் பாதித்து பைத்திய நிலைக்கு சென்றடைதல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்தவர்களை வைத்து இதனை செய்துள்ளனர்.
வாரத்துக்கு 2 முதல் 6 சாக்லெட் சாப்பிட்டு வந்தவர்களுக்கு ரத்தக் குழாய் உதறல் நோய் பாதிப்பு குறைந்தது.
இதன் மூலம் அதிக சாக்லெட் சாப்பிடுபவர்களுக்கு அதிக கலோரி ஏற்பட்டு இதய தசைகள் மற்றும் ரத்த குழாய் தசைகளை வலுப்படுத்துகிறது என்பது தெரியவந்துள்ளது. எனவே இதய நோயாளிகள் சாக்லெட் சாப்பிடுவது நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது.