அமெரிக்காவில் இனவெறி தாக்குதலில் ஈடுபட்ட பெண்: சீனர் காயம்!!
வெள்ளி, 17 மார்ச் 2017 (14:31 IST)
டிரம்ப் பதவி ஏற்ற பிறகு அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டினர் மீது இனவெறி தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
முதன் முறையாக சீனாவைச் சேர்ந்த ஒருவர், இனவெறி தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். அவரது பெயர் வாங் ஷென்ஸின் (68).
இவர் நியூயார்க்கில் ஒரு பஸ்சில் சென்று கொண்டிருந்த போது அவருடன் பயணம் செய்த அமெரிக்க பெண், வாங் தலையில் தான் வைத்திருந்த குடையால் பலமாக அடித்தாள். மேலும் அவர் அடுத்த நிறுத்தத்தில் இறங்கும் போது அவரை இடித்து கீழே தள்ளினாள்.
இவ்வாறு செய்துவிட்டு, எனக்கு சீனர்களை பிடிக்காது. அவர்களை வெறுக்கிறேன். நீங்கள் அமெரிக்காவை விட்டு உங்கள் நாட்டிற்கு செல்லுங்கள் என ஆவேசமாக கூறியுள்ளார்.
இது வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.