கொரோனா வைரஸ் - பாம்பு கறித் தொற்று: சைவத்துக்கு மாறும் சீனர்கள்!

சனி, 25 ஜனவரி 2020 (11:46 IST)
சீன மக்கள் அசைவத்தை விடுத்து காய்கறிகளை உண்ண முன்னுரிமை கொடுத்து வருகின்றனர். 
 
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மருந்துகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் மருந்துவ அவசரநிலையை அறிவிப்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் பரிசீலித்து வருகிறது. 
 
நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் சீனாவில் அதிகரித்து வருகிறது. இதுவரை 26 பேர் இந்த வைரஸால் இறந்துள்ளனர். ஒருவருக்கு ஒருவர் கை கொடுப்பதாலேயே வைரஸ் பரவி விடும் அபாயம் இருப்பதாக சீன மருத்துவ ஆராய்ச்சி குழு கண்டறிந்துள்ளது. 
 
வைரஸ் பரவிய வுகான் மற்றும் சுற்றியுள்ள 15 நகரங்களில் பேருந்து, ரயில், விமான போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் வைரஸ் தாக்குதலால் பாதிகக்ப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சீன அரசு மருத்துவமனை ஒன்றை துரிதமாக கட்டி வருகிறது.
 
அதோடு, பாம்பு கறியிலிருந்து நோய் பரவியிருக்கலாம் என்று சீன விஞ்ஞானிகள் கூறியிருப்பதால், மக்கள் ஊர்வன பறப்பன போன்றவற்றை விடுத்து காய்கறிகளை நாடத் தொடங்கியுள்ளனர் எனவும் செய்தி வெளியாகியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்