மேலும் இந்தியாவுடனான எல்லை பிரச்சினை, தைவானுடனான பிரச்சினையில் அமெரிக்காவின் தலையீடு போன்றவற்றால் சீனாவுக்கு உலக நாடுகளிடையே நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த பத்தாண்டுகளுக்குள் சீனா தனது அணு ஆயுதங்களை இரு மடங்காக அதிகரிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கிடையேயான மோதல் போருக்கு வித்திடுமோ என உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.