சீனாவில் பயங்கர நிலநடுக்கம்! மக்கள் அதிர்ச்சி!

ஞாயிறு, 23 ஜனவரி 2022 (10:00 IST)
சீனாவின் வடமேற்கு பகுதியில் திடீரென ஏற்பட்ட வலுவான நிலநடுக்கம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வடமேற்கே குயிங்காய் மாகாணத்தில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவாகியுள்ளதாக சீன நிலநடுக்க தொடர்பு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கும் பூமிக்கு உள்ளே 8 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 12ம் தேதி இதே குயிங்காய் மாகாணத்தின் வேறு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் தற்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்