கடல் எல்லைக்குள் நுழைந்த சீனாவின் 'டிரோன்; விரட்டியடித்த தைவான் ராணுவம்!

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2022 (13:44 IST)
தைவான் நாட்டின் கடல் எல்லைக்குள் சீனாவின் டிரோன் நுழைந்த நிலையில் அந்த நாட்டு வீரர்கள் டிரோனை விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் சமீபத்தில் தைவான் நாட்டுக்கு அரசு முறை பயணமாக சென்றதை அடுத்து சீனா கடும் கண்டனம் தெரிவித்தது
 
 இதனை அடுத்து சீனாவின் ராணுவம் தைவான் நாட்டை சுற்றி போர்க் கப்பலை நிறுத்தியது. இதையடுத்து போர் பதட்டம் ஏற்பட்டது
 
இந்த நிலையில் சீனாவிலிருந்து ஆளில்லா ட்ரோன் ஒன்று தைவான் நாட்டின் எல்லையில் நுழைந்ததாகவும்,  அதனை தைவான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்திவிரட்டி அடித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது 
 
தைவான் துப்பாக்கி சூடு நடத்தியதும்  சீனாவின் ட்ரோன், மீண்டும் சீனாவின் கடல் எல்லைக்குள் நுழைந்து விட்டதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்