சீனாவின் முக்கிய நகரில் முழு ஊரடங்கு: அதிர்ச்சியில் ஒரு கோடி மக்கள்!

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (08:46 IST)
சீனாவில் உள்ள முக்கிய நகரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதை அடுத்து அந்த நகரில் வசிக்கும் ஒரு கோடியே 30 லட்சம் மக்கள் பெரும் சிக்கலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சீனாவில் மீண்டும் கொரொனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்ததை அடுத்து ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் சீனாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான சியான் நகரில் கொரொனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதன் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது
 
கடந்த புதன்கிழமை அமல்படுத்தப்பட்ட இந்த ஊரடங்கு மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அமலில் இருக்கும் என்றும் ஊரடங்கிற்கு எதிராக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சீன அரசு தெரிவித்துள்ளது 
 
சியான் நகரில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக அந்நகரில் வசிக்கும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தற்போது வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்