சீனாவில் அதிகரித்த புதிய வகை கொரோனா! – அமலுக்கு வந்தது ஊரடங்கு!

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (13:51 IST)
உலகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் சீனாவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்த நிலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் மீண்டும் குறைந்தது. அதையடுத்து மீண்டும் பல நாடுகளில் கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது சீனாவில் உருமாறிய டெல்டா கொரோனா வைரஸ் தீவிரமடைய தொடங்கியுள்ளது. சீனாவின் 20 நகரங்களில் டெல்டா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதால் பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதுடன், ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்