முட்டையை உடைத்து, ஓட்டுக்கு வெளியே குஞ்சு பொரிக்க வைத்து சாதனை படைத்துள்ளனர் ஜப்பானிய மாணவர்கள்.
பொதுவாக, கோழி முட்டையிட்டு சில நாட்கள் அடை காக்கும். அதன்பின், முட்டை உடைந்து கோழிக்குஞ்சு வெளியே வரும். ஆனால் இந்த நடைமுறையை மாற்றியுள்ளனர் ஜப்பானிய மாணவர்கள்.
அதாவது, சாதாரண பிளாஸ்டிக் உறைக்குள் முட்டையை உடைத்து ஊற்றி, அதை ஒரு டம்ளருக்குள் வைக்கிறார். பின்னர் திறந்த நிலையில், அந்த டம்ளரில் இன்குபேட்டரை வைக்கிறார். இதன் மூலம் நாட்கள் செல்ல செல்ல கருவில் வளர்ச்சி ஏற்பட்டு, முடி, இறக்கை எல்லால் உருவாகி, 21 நாட்களில் ஒரு முழுக் கோழிக்குஞ்சு உருவாகி கீழே குதித்து அங்கும் இங்கும் ஓடுகிறது.
முட்டைக்கு உள்ளேதான் கரு வளர்ச்சி பெற்று பறவையினம் உருவாகும் என்பதை உடைத்து இருக்கிறார்கள் அந்த மாணவர்கள். இதுவரை 5 கோடிக்கும் மேலானவர்கள் அந்த வீடியோவை ஆச்சர்யத்தில் வாயை பிளந்துள்ளனர்.