கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இதுவரை 2804 பேரை பலிக் கொண்டுள்ளது. சீனா மட்டுமல்லாமல் ஈரான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. வைரஸை கட்டுக்குள் கொண்டுவர பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனவில் இருந்து தப்பிக்க முகமூடி அணியும் போது ஆண்களின் அடர்த்தியான தாடி, மீசை போன்றவை பாதுகாக்கும் முகமுடியையும் மீறி வைரஸ் உடலுக்குள் புக வழிவகை செய்கிறது என அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புப் பிரிவுத் துறையினர் ஆய்வு நடத்தி முடிவை வெளியிட்டுள்ளனர்.