அமைச்சரை அடுத்து துணை அதிபருக்கும் கொரோனா வைரஸ்: ஈரானில் பரபரப்பு

வியாழன், 27 பிப்ரவரி 2020 (20:46 IST)
அமைச்சரை அடுத்து துணை அதிபருக்கும் கொரோனா வைரஸ்
கடந்த சில நாட்களாக சீனாவை மட்டுமின்றி சீனாவின் அண்டை நாடுகளையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 2000க்கும் மேற்படோர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் தற்போது இந்த வைரஸ் ஈரானிலும் தலைவிரித்து ஆடி வருகிறது.
 
இரானில் கொரானோ வைரஸ் தாக்குதல் சற்று அதிகமாக இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் அந்நாட்டின் துணை சுகாதார அமைச்சர் இராஜ் ஹரீர்ச்சி என்பவரையும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் துணை சுகாதார அமைச்சர் இராஜ் ஹரீர்ச்சி அவர்களை அடுத்து தற்போது அந்நாட்டின் துணை அதிபர் மசூமே எப்டேகர் என்பவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக இரவு பகலாக ஈரான் அரசு நடவடிக்கையை எடுத்து வருவதாகவும் ஈரானிய சுகாதார அமைச்சகம் இதற்காக தனி அமைப்பு ஒன்றை உருவாக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்