கியூபா புரட்சியாளரின் மகன் கமீலோ சேகுவாரா திடீர் மரணம்

புதன், 31 ஆகஸ்ட் 2022 (15:41 IST)
அர்ஜென்டினாவில் பிறந்து கியூபா, மெக்ஸிக்கோ, பொலிவியா போன்ற நாடுகளின் புரட்சிக்கும், தியாகத்திற்கும் உதாரணமாக திகழ்ந்தவர் சேகுவாரா. கியூபாவை சேர்ந்த இவர் புரட்சியாளர், மருத்துவர், அரசியல்வாதி, இலக்கியவாதி என பன்முகத்தன்மை கொண்டவர்.


சேகுவாராவின் (மூன்றாவது) இளைய மகன் கமீலோ சேகுவாரா. கியூபா நாட்டின் ஹவானாவில் உள்ள சே குவாரா கல்வி மையத்தின் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் கமீலோ சேகுவாரா வெனிசூலா நாட்டின் சராகவ் நகருக்கு பயணம் மேற்கொண்டபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்ட சிறிது நேரத்தில் அவர் மரணம் அடைந்துள்ளார். அவருக்கு வயது 60.

கமீலோ சேகுவாராவின் மறைவுக்கு கியூபா நாட்டு அதிபர் மிகுவல் டியாஸ்கனேல் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஆழ்ந்த வலியுடன் நாங்கள் சே குவாராவின் மகனை, அவரது சிந்தனைகளை ஊக்குவித்த கேமிலியாவை வழியனுப்புகிறோம்.” என்று பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து சமூக வலைதளங்கள் முழுவதும் சே குவாராவின் மகன் உயிரிழப்பிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்